search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கடைகள்"

    தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. #TNRationshops #aheadofDeepavali
    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு வசதியாக தீபாவளி பண்டிகைக்கு முன்தினமான 5-ம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை தினமாக முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இதைதொடர்ந்து, ரேஷன் கடைகளும் விடுமுறை தினத்தன்று இயங்காது என்று பரவலாக கூறப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. #TNRationshops #aheadofDeepavali
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
    திருவாரூர்:

    சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுவிநியோகத் திட்ட கிடங்கில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மாத ஒதுக்கீட்டின்படி நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

    அப்போது அனைத்து பொருள்களும் உரிய தரத்துடன், சரியான எடையில் இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர்வு செய்யப்பட வேண்டுமென கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அங்காடிகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும், முன்நகர்வு செய்யப்பட்டு நவம்பர் 1-ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, கையிருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    அமுதம் நியாய விலை அங்காடிகளை ஆய்வு செய்த அமைச்சர் குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். கோபாலபுரம் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தரமான அரிசி, அனைத்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

    மழை காலங்களில் கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகாமல் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
    தட்டுப்பாடு காரணமாக புழுங்கல் அரிசி, ரே‌ஷன் கடைகளுக்கு தேவையான அளவு வராததால் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி தான் வழங்கப்படுகிறது. மீதம் பெறுவோருக்கு பச்சரிசி வழங்குகிறார்கள். #Rationshop #ParboiledRice
    சென்னை:

    ரே‌ஷன் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி எது விருப்பமோ, அதை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் இதுவரை வாங்கி வந்தனர்.

    ஆனால் இப்போது புழுங்கல் அரிசி, ரே‌ஷன் கடைகளுக்கு தேவையான அளவு வராததால் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி தான் வழங்கப்படுகிறது. மீதம் பெறுவோருக்கு பச்சரிசி வழங்குகிறார்கள்.

    ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் கணக்கிட்டு ரே‌ஷன் அரிசி வழங்க வேண்டும்.

    வீட்டில் 4 பேர் இருந்தால் 20 கிலோ அரிசி, 5 பேர் இருந்தால் 25 கிலோ அரிசி தர வேண்டும். ஆனால் சென்னை மற்றும் புறநகரில் உள்ள கடைகளில் பச்சரிசிதான் கிடைக்கிறது. புழுங்கல் அரிசி கேட்கும் அளவுக்கு கொடுப்பதில்லை.

    இதுபற்றி ரே‌ஷன் கடைக்காரர்கள் கூறுகையில், 100 மூட்டை புழுங்கல் அரிசி தேவை என்றால் 30 மூட்டை அரிசிதான் குடோன்களில் இருந்து தருகிறார்கள். 70 மூட்டை பச்சரிசி கொடுக்கிறார்கள்.

    பொது மக்களில் பலர் புழுங்கல் அரிசி பயன்படுத்துவதால் அனைவருக்கும் அரிசி கிடைக்க வேண்டும் என்பதற்காக 5 கிலோ வீதம் புழுங்கல் அரிசியை கொடுத்துவிட்டு மீதத்துக்கு பச்சரிசியை வழங்குகிறோம்.


    உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் பிரயோஜனம் இல்லை. தேவையான அளவு புழுங்கல் அரிசியை கடைக்கு அனுப்புவதில்லை என்றனர்.

    இதுபற்றி உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, புழுங்கல் அரிசி தட்டுப்பாடு இருப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் இந்த குறைபாடு நீங்கும் என்றார்.

    ரே‌ஷன் கடைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்தான் வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ‘கைரேகை’ பதிவு முறை விரைவில் அறிமுகப்படுத்த பட இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Rationshop #ParboiledRice
    ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. #RationCard #SmartCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    தற்போது 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளதால் பெருமளவு முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஸ்மார்ட் கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து ரே‌ஷன் பொருட்களை சிலர் வாங்கி வருகின்றனர்.

    வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்களிடம் கார்டை கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கின்றனர். இதனால் அரசின் மானியம் வீணாகிறது.

    இதை தடுப்பதற்காக ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுடன் கைவிரல் ரேகையையும் பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற புதிய நடைமுறையை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை கமி‌ஷனர் மதுமதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பொது வினியோக திட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உரிய நபருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


    தற்போது ‘ஸ்மார்ட் கார்டு’ நடைமுறைக்கு வந்த பிறகு பெருமளவு முறைகேடுகள் குறைந்து விட்டது.

    இதன் அடுத்த கட்டமாக குடும்ப உறுப்பினர்கள் ரே‌ஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்தால்தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலையை கொண்டு வர உள்ளோம்.

    ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டை பதிவு செய்யும் மிஷினுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான மிஷினும் கூடுதலாக வைக்கப்பட உள்ளது.

    அதில் குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் கிடைக்கும். ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும் போதும் கைரேகை வைக்க வேண்டும்.

    இந்த நடைமுறை இன்னும் 3 மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்காக கைவிரல் ரேகையை பதிவு செய்யும் மிஷின் ரே‌ஷன் கடைகளில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RationCard #SmartCard
    ×